தளி சட்டமன்றத் தொகுதியில் ரூ.3.81 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.46.81 மதிப்பில் தளி – ஜவளகிரி சாலை முதல் T.மல்லசந்திரம் வரை தார் சாலை அமைக்கும் பணி, பள்ளப்பள்ளி முதல் சாரண்டப்பள்ளி வரை ரூ.66.42 மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி, பிரதம மந்திரி சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.43 கோடி மதிப்பில் தளி – தேன்கனிக்கோட்டை சாலை முதல் சாரண்டப்பள்ளி வரை தார் சாலை அமைக்கும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் அன்னியாளம் கிராமத்தில் ரூ.4 இலட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி, சீர்திம்மனட்டி கிராமத்தில் ரூ.4 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, ஹோசூர் அக்ரஹாரம் கிராமத்தில் ரூ.4 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் இராமச்சந்திரன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் இலகுமையா, மாவட்ட கவுன்சிலர்கள் பழனி, பூதட்டியப்பா, குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.