
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் புதிய பேருந்து நிலையம் அருகாமையில் தேன்மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிக்கப்படும் என சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து பெற்றோர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
முறையான அனுமதி பெறாமலும் மற்றும் பள்ளி அருகே உள்ள தனது உறவினரின் இடத்தை ஆக்கிரமித்து பள்ளி கட்டிடம் கட்டியிருப்பதால், நீதிமன்றம் பள்ளிக்கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டுள்ளது.
ஆனால் 2025–2026 கல்வியாண்டில் இன்னும் 5 மாதங்களில் 10 & 12ஆம் வகுப்பு பொது தேர்வு இப்போது கட்டடம் இடிக்கப்பட்டால்
மாணவர்களின் கல்வி, எதிர்காலம் — முழுமையாக பாதிக்கப்படும் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோரிக்கை :
மாணவர்களின் நலன் கருதி இந்த கல்வியாண்டு முடியும் வரை — இன்னும் 5 மாதங்கள் — கட்டட இடிப்பு உத்தரவை நிறுத்த வேண்டும்.
தேன்மலர் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து படிக்கும் சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது.
இதற்காக மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறை, மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் கோட்டாட்சியர் திரு பிலிக்ஸ் ராஜ் மக்களுக்கு சிறு கோரிக்கை விடுத்தார் திங்கட்கிழமை பெற்றோர்கள் சேர்ந்து நீதிமன்றத்தை அணுகி உள்ளீர்கள் நீதிமன்ற தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் மாணவர்களுடைய படிப்பு தொடர்ந்து நடைபெறும் அதற்காக மாவட்ட நிர்வாகம் அனைத்து முயற்சிகளும் எடுத்து வருகிறது மாணவர்களின் படிப்பு வீணாகாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவளித்துள்ளார் எனவே தங்கள் நடத்தும் சாலை மறியலை கலந்து செல்லுங்கள் என்று தெரிவித்தார் அதைத் தொடர்ந்து பெற்றோர்களும் மாணவர்களும் தங்களது சாலை மறியலை கைவிட்டு கலந்து சென்றனர் மேலும் காவல்துறையினர் திருப்பூரிலிருந்து அதிரடி படை வீரர்களை அருகில் வைத்துக்கொண்டு எந்தவித அசம்பா விதம் நடக்காமல் இருக்க லத்தியுடன் கூடிய காவல்துறையினர் வந்ததும் போராட்ட குழுவினர் கலைந்து சென்றனர்
