கள்ளக்குறிச்சியில்திமுக அரசை கண்டித்து பாஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜகவின் சார்பில் கோவையில் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக மகளிர் அணியின் சார்பில் மாவட்ட மகளிர் அணி தலைவி மாலினி தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநிலத் துணைத் தலைவர் சாந்தி கிருஷ்ணகோபால், கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,
மதுவிலக்கு அமல்படுத்திட வேண்டும் என்றும்,
சிறப்பு வாக்காளர் திருத்தப்பட்டியாலால் உங்களுக்கு என்ன கோவம் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோஷமிட்டனர்.
இந்தக் கூட்டத்தில்
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம், மாவட்ட பொதுச்செயலாளர் கயல்விழி, மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர், இதில் ஏராளமான மகளிர், மற்றும் மாநில, மாவட்ட,ஒன்றிய, நகர,பேரூராட்சி, ஊராட்சி, சிற்றூராட்சி, ஊராட்சி பொறுப்பாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.