இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்களே கோலாகலமாக கொண்டாடிய பிறந்தநாள் விழா
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் இரண்டாவது வார்டில் குட்டி (எ) சீனிவாசன் நகர மன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்
மேலும் அப்பகுதியில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளும் மக்களிடையே நல்ல அன்பும், மரியாதையும், பாசமும் கொண்டு செயல்பட்டு வருகிறார்
பின்பு இன்று இவருடைய பிறந்தநாள் விழாவினை அப்பகுதி மக்கள் கோலாகலமாக கிரீடம் சுட்டி பட்டாசுகள் வெடித்து மாலைகள் அணிவித்து கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்கள்
பின்பு வருகை புரிந்த அப்பகுதி மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி பகுதி மக்களை பாசத்துடன் நடந்து கொண்ட காட்சி அனைவரும் மனதை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
