தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல்

மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் நாளையொட்டி தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணியினர் அறுசுவை மதிய உணவு வழங்கல்

தஞ்சாவூர் டிச.7.தஞ்சாவூர் மேம்பாலம் பார்வையற்றோர் பள்ளியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47வது பிறந்த நாளையொட்டி தஞ்சை மாநகர தி.மு.க வர்த்தகர் அணி சார்பில் பார்வையற்றோர் பள்ளி மாணவ, மாணவியர்க்கு அறுசுவை உணவான இறைச்சி பிரியாணி, சிக்கன் வறுவல் ஆகிய மதிய உணவு வழங்கினர்.

மாவட்ட செயலாளரும். திருவையாறு சட்டமன்ற உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைப்பெற்றது.

மாநகர அமைப்பாளர் செந்தமிழன், துணை அமைப்பாளர் பி.என்.எஸ்.செந்தில், மாயா கார்த்தி,செந்தில்குமார், மேலவீதி சிங்காரம், சிங்காரவேலவன்,பன்னீர் ஆகியோர் முன்னிலை வகித்து ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி மேயரும், நகர செயலாளருமான சண். ராமநாதன்,மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, இளைஞர் அணி அமைப்பாளர் முகில் வேந்தன், துணை அமைப்பாளர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட துணை செயலாளர் கனகவள்ளி பாலாஜி, மண்டல தலைவர்கள் எஸ்.சி. மேத்தா, புண்ணிய மூர்த்தி, கலையரசன், ரம்யா சரவணன், நகர பொருளாளர் காளையார் சரவணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு. கழகத்தினர் அனைவரும் பள்ளி வளாகத்தில் வர்த்தக அணி ஏற்பாடு செய்திருந்த
மதிய உணவு இறைச்சி பிரியாணி, சிக்கன் வருவல் உணவு வருந்தி சென்றனர்.