தமிழ்நாடு அரசின்  கட்டுப்பாடற்ற  தொழிலாளர் நல வாரிய tnuwwb.tn.gov.in இணைய தள சேவை !!  இ சேவை மையங்களில் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள்!!  கண்டு கொள்ளுமா தமிழக அரசு !

           

இ சேவை மையம் என்பது இணையதளம் தொடர்பான சேவைகளை பொதுமக்களின் உதவிக்காகவே உருவாக்கப்பட்டது.பொதுமக்கள் பயன்படுத்த இணையம் சார்ந்த சாதனம் அனைவரிடமும் இருக்காது.அப்படியே இருந்தாலும் அவர்கள் பயன்படுத்த முடியாது.அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு கட்டுமான, அமைப்புசாரா  தொழிலாளர் நல வாரிய இணையதளம் 19-06-2020ல் துவங்கப்பட்டு, தமிழ்நாடு மின் ஆளுமை முகமின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தான் செயல்படுகிறது. இதன் முக்கிய நோக்கம் தொழிலாளர்கள் மாவட்ட நல வாரிய அலுவலகம் நேரில் செல்வதையும் தொழிலாளர் அலைகழிக்கப்படுவதை  தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் உருவாக்கப்பட்டது.

தமிழ்நாடு கட்டுமான  தொழிலாளர் நல வாரியம் 1994 உருவாக்கப்பட்டு பின்னர் 1999ல் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தொழிலாளர்கள் உறுப்பினர் பதிவு,புதுப்பித்தல், கேட்பு மனுக்கள்,ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து விண்ணப்பங்களும் தொழிற்சங்கம் மூலம் பெறப்பட்டு தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் கடந்த 30 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த நல வாரியம் இன்றைக்கு ஆன்லைன் பதிவு முறையை அறிமுகப்படுத்தப்பட்டு,தொழிலாளர் துறைக்கு  சம்பந்தம் இல்லாத இ சேவை மையங்களுக்கு தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக நலவாரிய பணிகளை அனுமதித்தது ஏன் என்ற கேள்வி தொழிற்சங்கங்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

தமிழ்நாடு தொழிலாளர் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம் 1926தொழிற்சங்க பதிவு சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சங்கங்கள் மட்டுமே நலவாரிய பணிகளை மேற்கொள்ள முடியும்.தொழிற்சங்கங்களுக்கு என்று தனி சட்ட விதிமுறைகளை உருவாக்கி தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், தொழில் தகராறு,தொழில் பயிற்சி, மருத்துவ காப்பீடு, போன்ற தொழிலாளர் நலன் சார்ந்த அனைத்து சலுகைகளையும் பெற்றுத் தர தொழிலாளியை தொழிற்சங்கத்தில் உறுப்பினராக சேர்க்க சட்டப்படி சந்தா வசூலிக்கப்பட்டு  தொழிலாளிக்கென தனி உறுப்பினரின் வழங்கி தொழிலாளிக்கு சங்கத்தின் மூலம் தொழிற்சார்ந்த  அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

தொழிற்சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்து தொழிலாளர்களையும் தொழிற்சங்க சட்டப்படி உறுப்பினர் பதிவேட்டில் பதிவு செய்து அவர்களிடம் வசூலிக்கும் சந்தா தொகைக்கு ரசீது வழங்கப்பட்டு அதற்கான வரவு செலவு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின் தேவைகளை அறிந்து கொள்ள செயற்குழு, நிர்வாக குழு, பொதுக்குழு போன்ற கூட்டங்களை நடத்தி அதில் அனைத்து தொழிலாளர்களையும் பங்கேற்க வைத்து அவர்களின் குறைகளை நீக்கி தேவைகளை பூர்த்தி செய்வது தொழிற்சங்கத்தின் தலையாய கடமையாக செய்து வருகின்றோம்.தொழிற்சங்கங்கள் ஆண்டுதோறும் தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை, தொழிலாளர்களிடம் பெறப்பட்ட சந்தாத்தொகை, கூட்டம் நடத்தப்பட்ட விவரம்,செலவு செய்யப்பட்ட விவரம் இவை அனைத்தும் தகுதி வாய்ந்த தணிக்கையாளர் (ஆடிட்டர்) தணிக்கை செய்து ஒப்புதல் பெறப்பட்ட பின்பு  தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தில் தொழிற்சங்கத்தின் ஆண்டு அறிக்கை இ படிவம் சமர்ப்பித்து தொழிலாளர் துறை ஒப்புதல் பெறப்பட்டு,அதன் நகலை கட்டுமான தொழிலாளர் நல வாரிய தொழிலாளர் உதவி ஆணையர் அவர்களிடம் சமர்பித்து ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே நலவாரியத்தில் தொழிலாளி பதிவு செய்ய பணிச்சான்று தொழிற்சங்க தலைவர்/பொதுச் செயலாளர் வழங்க ஒப்புதல் அளிக்கப்படும்.

இ சேவை மையத்தில் மேலே குறிப்பிட்ட தொழிலாளர் துறை சம்பந்தமான எந்த நடவடிக்கையும் இல்லாமல் எந்த அடிப்படையில் எந்தச் சட்டத்தின் கீழ் இ சேவை மையங்களுக்கு அனுமதி அளித்தார்கள் என்ற கேள்விக்கு இன்று வரை விடை தெரியவில்லை.தொழிலாளர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பதில் சொல்வதில்லை.

வருவாய்த்துறை மூலம் தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் இ சேவை மையம் மூலம் செயல்படுத்தி வருவதால் தொழிலாளர் துறை கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் TNUWWB.gov.in இணையதளமும் இணைக்கப்பட்டுள்ளது.இதை முற்றிலும் தொழிற்சங்க சட்டவிதி முறைக்கு  எதிரான செயல்பாட்டிற்கு தமிழக அரசு தீர்வு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.தமிழக அரசின் இணையதள சேவை அனைத்து பொதுமக்களும் அவரவர் பயன்படுத்த வேண்டும் என்றால் வரவேற்புக்குரியதுதான்.

பின்னர் எதற்காக இ சேவை மையத்திற்கு மின் ஆளுமை முகமை மூலம் தனி ID வழங்கப்பட்டுள்ளது.பெரும்பாலும் பொதுமக்களுக்கு இணையதள சேவையை பயன்படுத்த முடியாததால் இ சேவை மையங்களின் மூலம் அரசின் திட்டங்களை எளிமையான முறையில் பெறவும்,படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தவும் இ சேவை மையங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது.45 ஆண்டுகளுக்கு மேலாக தொழிற்சங்கம் நடத்தி வரும் தொழிற்சங்கங்களின் உரிமையை பறிக்கின்ற வகையில் அமைப்புசாரா நல வாரிய இணையதளத்தை பொதுவெளியில் பயன்படுத்த அனுமதித்து தொழிற்சங்கம் என்ற அங்கீகாரத்தை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை சிதைத்து விட்டது.

தமிழக அரசின் அனைத்து சேவைகளும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை கட்டுப்பாட்டின் கீழ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தான் செயல்படுத்துகிறது. இதனைத் தவிர்த்து தமிழ்நாடு மின் ஆளுமை முகமை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய நிர்வாக அலுவலரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து TNUWWB.gov.in இணையதளம் செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொழிலாளர் துறையில் பதிவு பெற்ற தொழிற்சங்கங்களுக்கு தொழிற்சங்க பதிவு சான்றிதழ் குறிப்பிட்டுள்ள பதிவு எண் அடிப்படையில் தொழிற்சங்கங்களுக்கு தனி ID வழங்க வேண்டும். தொழிற்சங்கத்தை தவிர பிற எந்த இ சேவை மையமும் CSC,சென்டர்களிலும் நலவாரிய பணிகளை தொழிற்சங்க பதிவு சான்றிதழ் இல்லாமல் உறுப்பினர் பதிவு செய்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு 10-09-2024, சென்னை தொழிலாளர் ஆணையரகத்தில் நடைபெற்ற நல வாரிய திறனாய்வுக் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனுக்கள் உடனுக்குடன் பரிசீலித்து விரைந்து செயல்பட வேண்டும் என தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் திரு வீரராகவ ராவ் அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் 40 மாவட்டதொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தொழிலாளர் உதவி ஆணையர் அவர்கள் தொழிலாளர் உறுப்பினர் பதிவிற்கு விண்ணப்பித்த விண்ணப்பங்கள் மாவட்டத்திற்கு சுமார் பத்தாயிரம் மணுக்கள் தேங்கியுள்ளதாகவும் இவை அனைத்தும் இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்த மனுக்கள் எனவும் இதனை உடனடியாக மீள் பதிவு செய்து கொடுக்க வேண்டும் என தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தனர்.இதனால் தமிழகத்தில் சுமார் 4 லட்சம் மனுக்கள் தேங்கியுள்ளது தெரிய வந்தது. இதனை ஒரு வாரத்துக்குள் மீள் பதிவு செய்யாத அனைத்து விண்ணப்பங்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் அந்தத் தொழிலாளி தொழிற்சங்கம் மூலம் பதிவு செய்ய வந்தால் பதிவு செய்ய முடியவில்லை.இதற்குக் காரணம் தொழிலாளியின் தொலைபேசி எண் நல வாரியத்தில் நீக்காமல் உள்ளது தான். இதனால் தொழிலாளி அலைக்கழிக்கப்பட்டுநல வாரியத்தில் உறுப்பினர் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இ சேவை மையம் நடத்தும் பணியாளருக்கு தொழிற்சங்க விதிகள் எதுவும் தெரியாது.இவர்கள் வெறும் வியாபார நோக்கத்தோடு பதிவு செய்துவிட்டு நல வாரியத்தின் மூலம் திருப்பப்படும் மனுக்களுக்கு எந்த விதமான பதில் அளிப்பதில்லை. நலவாரிய சம்பந்தமான எந்த சட்ட திட்டமும் இ சேவை         மையங்களுக்கு தெரியாது.ஆன்லைனில் பதிவு செய்யும் தொழிலாளியின் விவரங்களை உறுப்பினர் பதிவேடு பராமரிப்பது இல்லை. Resubmit,செய்வதில்லை.நல வாரியத்தின் பணிகளை தொடர்ச்சியாக கண்காணித்து தொழிலாளிக்கு உறுப்பினர் அடையாள அட்டை பெற்று தருவதில்லை. கேட்பு மனு விண்ணப்பங்களும் முறையாக சமர்ப்பிப்பதில்லை.இதனால் தொழிலாளி இ சேவை மையத்துக்கு அலைக்கழிக்கப்பட்டது தான் மிச்சம் என்ற நிலையில் உள்ளது.

15-10-2024,முதல்  ஸ்வீகி,சொமோட்டோ, பிளிப்கார்டு,ஆன்லைன் மூலம் பணியாற்றுகின்ற தொழிலாளர்களுக்கு அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரடி உறுப்பினர் பதிவு செய்ய நேரடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நல வாரியத்தில் மாயமான தொழிலாளியின் தரவுகளை மீட்க முடியாமல் மாவட்ட நல வாரிய அலுவலகத்தில் தொழிலாளியே நேரில் வரவழைத்து பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.ஓய்வூதியம் பெறும் அனைத்து தொழிலாளர்களையும் ஆயூல் சான்று பதிவேற்றம் செய்த பின்பும் நேரடியாக அலுவலகத்துக்கு வந்து கையொப்பம் இட வேண்டும் என அலையடிக்கப்படுகிறது.நலவாரிய அனைத்து பணிகளுக்கும் அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும் என்றால் எதற்காக இந்த ஆன்லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

25 ஆண்டுகளாக கையேடு தொழிலாளி நேரில் வந்து பதிவு செய்ததற்கும் ஆன்லைன் முறைக்கும்  எந்த வித்தியாசமும் இல்லை. இதற்கு முழு காரணம் நலவாரிய இணையதளம் பொதுவெளியில் பயன்பாட்டுக்கு வந்ததும், இ சேவை மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டது தான்.

தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் வேலைவாய்ப்பு மற்றும் பணி நிபந்தனைகள் ஒழுங்குமுறை சட்டம் 1982 ன் படி ,தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் (கட்டுமான தொழிலாளர்கள்) நலத்திட்டம் 1994 பிரிவு 5(d), உடல் உழைப்பு தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம்- 1999- 2006ன் பிரிவு 9(b)ன் படி பதிவு பெற்ற தொழிற்சங்கத்தின் தலைவர் / பொதுச் செயலாளர், தொழிலாளர்களின் தொழில் வேலைவாய்ப்பு சான்று வழங்கும் அதிகாரத்தை பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும்  நலவாரிய அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளித்து முறையாக நலவாரியம் செயல்பட  வழிவகை செய்ய வேண்டும்.

02-12-2023 முதல் 30-10-2024,நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளிகள் தற்போது புதுப்பித்தல் செய்ய முடியாமல் மாவட்டம் தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.குறிப்பாக இவர்கள் ஓய்வூதியம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இயற்கை மரணம் விபத்து மரணம் ஏற்பட்டாலும் கூட புதுப்பித்தல் செய்ய முடியாத காரணத்தினால் நலவாரியத்தின் மூலம் உதவித்தொகை பெற முடியாத சூழ்நிலையில் உள்ளது. எனவே 02-10-2023 முதல்31-10-2024ஒரு புதுப்பித்தல் இல்லை என்றாலும் உதவித்தொகை வழங்கலாம் என உரிய உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு அமைப்புசாரா தொழிலாளர் நலன் கருதி தனி கவனம் செலுத்தி நலவாரித்தை முழுமையாக மீட்டெடுத்து, தொழிற்சங்க பதிவு சான்றிதழ் இல்லாத இ சேவை மையங்களில் நல வாரிய பணி செய்வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பதிவு பெற்ற தொழிற்சங்கங்களுக்கு பதிவுச் சான்றிதழ் பதிவு எண் படி நலவாரிய பணிகளுக்கு தனி ID வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின்  அனைத்து பணப்பயண் முறையாக சென்றடையும்.போலியான உறுப்பினர் பதிவு  தடுக்கப்படும் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம்.

தொழிற்சங்க அங்கீகாரம் பெற்றவர்கள் தொழிற்சங்கத்தில் பதிவு செய்து உறுப்பினர்  எண் வழங்காமல், தொழிலாளி விபரம் பூர்த்தி செய்யாமல்  இ சேவை மையங்களுக்கு பணிச் சான்று வழங்கி வழங்கி வருவதால் போலியான தொழிலாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.இவர்கள் மீது தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆ.கதிர்வேல்.மாநிலத் தலைவர்,

தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு.