ராயக்கோட்டையில் ஆர்ஓ குடிநீர் வழங்க புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை..

ராயக்கோட்டையில் ஆர்ஓ குடிநீர் வழங்க புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை
ராயக்கோட்டை,டிச.1-
வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை ஊராட்சியில், சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆர்ஓ குடிநீர் வழங்க புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
இதற்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் செயலாளர் கிருஷ்ணன், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொகுதி எம்எல்ஏ கே.பி.முனுசாமி பூமி பூஜை செய்து புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், பொது மக்கள் கலந்துக்கொண்டனர்.