
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவர் ஆகிய குமாரமங்கலம் கே.சங்கர் தலைமை வகித்தார். வலங்கை மான் கிழக்கு ஒன்றிய செயலாளர் சாத்தனூர் யூ. இளவரசன், நகர செயலாளர் சா. குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் பேரறிஞர் அண்ணா சிலை, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை, புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் ஜெய.இளங்கோவன், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளரும்,முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான மாஸ்டர் எஸ்.ஜெயபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், மாவட்ட பிரதிநிதிகள் எஸ். மூர்த்தி, ஆர்.ஜி. பாலா, தொழுவூர் முனுசாமி, நகர அவை தலைவர் ரத்தினகுமார், மாத்தூர் குமார், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் விடையில் சங்கர் உள்பட உள்ளாட்சி நிர்வாகிகள், கட்சியின் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள்,கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
