
கடையநல்லூர் முத்துக்கிருஷ்ணாபுரம் சேனையர் தெரு சேனைத்தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ சேனை விநாயகர் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 26ம் தேதி காலையில் மங்கள இசை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, கஜ பூஜை நடந்தது. மாலையில் முதல் கால யாகசாலை பூஜைகள் பூர்ணாஹுதி நடந்தது. 27ம் தேதி காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜை, மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் தீபாரதனை பிரசாதம் வழங்குதல் நடந்தது. இரவில் யந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது.

கும்பாபிஷேக நாளான நேற்று முன்தினம் காலையில் நான்காம் கால யாகசாலை பூஜைகள், தொடர்ந்து யாத்ரா தானம், கரம் புறப்பாடு, கோபுரம் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் அலங்கார தீபாரதனைகள் நடந்தது. மதியம் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சேனையர் சமுதாய தலைவர் செல்வமணி, செயலாளர் சண்முகசுந்தரம், பொருளாளர் செல்வ கணேசன், துணைத் தலைவர் கரடி முத்து, துணை செயலாளர் ராஜா மணி, திருப்பணி குழு உறுப்பினர்கள் சுடலை, சண்முகவேல், நடராஜன், முப்புடாதி, இசக்கி, குமாரசாமி, அண்ணாதுரை, அழகுசுந்தரம், ஆறுமுகசாமி மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
