தஞ்சாவூர்,அக்.21- தஞ்சை தென்னக பண்பாட்டு மைய அரங்கில் அபிராமி நாட்டியாலயா சார்பில் 10-வது சலங்கை பூஜை விழா நடந்தது. விழாவிற்கு முரசொலி எம்.பி.தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் நாகப்பட்டினம் தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா பொன்னையா ராமஜெயம் பொது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச் செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மோகன்தாஸ்- சுகந்தி மகள் மேகா விவேக் ஆனந்த்-சுபத்ரா மகள் தன்யஸ்ரீ பார்கவி சந்திரபோஸ் -தனம் மகள் தூலிகா போஸ் கணேசமூர்த்தி-சிவசங்கரி மகள் தீக்ஷனா சுஜாதா மகள் மதிவதனி ஆகியோர் பரதநாட்டியம் ஆடினார்கள்.
ஶ்ரீ அபிராமி நாட்டியாலா நிறுவனர், நாட்டிய கலைச்சுடர் மணி. அபிராமி ராஜேஸ்கண்ணன் நட்டு வாங்கம், ராஜா ஸ்ரீவர்சன் பாட்டு பாடினார். அய்யம்பேட்டை செந்தில் குமார் மிருதங்கம் வாசித்தார். திருமானூர் கார்த்திகேயன் புல்லாங்குழல் வாசித்தார். முன்னதாக ராஜேஷ் கண்ணன் வரவேற்றார்.
தஞ்சையில் சலங்கை பூஜை விழா முரசொலி எம்.பி.கலந்து மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் கொண்டார்.
