திருவண்ணாமலைபெரியாண்டவர் கோவிலில் அன்னாபிஷேக விழா..


திருவண்ணாமலை டவுன் 10-வது வாணியங்குளத் தெருவில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நேற்று உலக உயிர்களுக்கு உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் வழங்கப்பட்ட நெய்வேத்தியம் மற்றும் காய்கறிகள் கொண்டு சாமிக்கும், அம்மனுக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு சாமி அன்னலிங்கமாக காட்சி அளித்தார். பின்னர் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.