ஐப்பசி மாதம் பௌர்ணமி மகா அன்னாபிஷேகம் ஆண்டுதோறும் சிவன் கோயில்களில் மகா அண்ணாபிசேகம் நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஐந்தாயிரம் வருடங்கள் பழமையான அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்திற்கு நேற்று அன்னம் மற்றும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிவலிங்கத்தில் தயிர் மோர் இளநீர் தேன் மஞ்சள் சந்தனம் பன்னீர் ஆகிய சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிவலிங்கத்தின் மீது படைக்கப்பட்ட அன்னத்தையும் காய்கறிகளையும் காவிரி அன்னைக்கு முதலில் கொடுத்து அதன் பின்பு அங்குள்ள பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் சிவலிங்கத்தின் மேல் வைக்கப்பட்ட அன்னம் காய்கறிகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
ஒகேனக்கல் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி மகா அண்ணா அபிஷேகம் நடைபெற்றது.
