
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வேளாண்மை துறையால் நிர்வகிக்கப்படும் உழவர் சந்தை உள்ளது. இதில் அன்றாடம் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் தினந்தோறும் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்யும் மையமாக உள்ளது. சமீப காலமாக விவசாய பொருட்களையே உற்பத்தி செய்து விற்பனை செய்து வருபவர்களுக்கு இடையூறாக தற்பொழுது வெளி மார்க்கெட்டில் தரம் இல்லாத காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து உழவர் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு ஏற்றார் போல் உழவர் சந்தை அதிகாரிகளும் தினந்தோறும் உற்பத்தி செய்து கொண்டு வரும் காய்கறிகளுக்கும், மற்ற உழவர் சந்தையை காட்டிலும் குறைந்த விலையை பென்னாகரம் உழவர் சந்தையில் விற்பனை விலையாக நிர்ணயிக்கின்றனர். இதனால் பல்வேறு விவசாயிகள் தினந்தோறும் கொண்டு வரும் காய்கறி பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காததால் தினசரி கடை போடாத நிலையும் ஏற்பட்டு வருகிறது. மேலும் முறையாக வேளாண் அதிகாரிகள் விளைச்ச நிலங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொள்வதும் இல்லை எனவும்
இடை தரகர்கள் வெளிவட்டாரத்தில் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கி எளிதாக அதிக லாபம் பெற்றுச் செல்கின்றனர். இதனால் விளைச்சலை நம்பி இருக்கும் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை போக்கிக் கொள்ள கூட போதுமான வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் அங்கே பராமரிக்கப்படும் உழவர் சந்தையில் முறையான பாதுகாவலர் இருப்பதும் இல்லை, வெளிவட்டாரத்தில் விற்கப்படும் காய்கறிகளை விட தினம்தோறும் புதிதாக உற்பத்தி செய்து கொண்டு வரும் காய்கறிகளுக்கு சரியான விலை கிடைப்பதும் இல்லை , இது உழவர் சந்தையா அல்லது வியாபாரிகள் சந்தையா என பல்வேறு குற்றச்சாட்டுகளை அங்கே விற்பனை செய்து வரும் விவசாயிகள் வேதனையுடன் கூறி வருகின்றன.
