திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா போராட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில், கிராம ஊராட்சி செயலாளரை கிராம ஊராட்சி நிர்வாக அலுவலராக நியமிக்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும், கணினி உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி வாய்ப்பு வழங்க வேண்டும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மக்கள் நலப் பணியாளர்களுக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

மேலும் 10 ஆண்டுகள் பணி முடித்த ஒன்றிய மேற்பார்வையாளர்களுக்கு ஒன்றிய பொறியாளர்களாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும், எம்.ஜி.என்.ஆர்.ஜி.எஸ். திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் வழங்க வேண்டும், குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்க வேண்டும், வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த மாபெரும் தர்ணா போராட்டத்தில் மாநில செயலாளர் சந்தோஷ்குமார் தலைமையில்
மாநில செயலாளர் தோழர் தொடர்கோ ஸ்ரீதர் தலைமையில் தோழர்கள் ஜெய்சங்கர், சார்லஸ் சசிகுமார், எஸ். வெங்கடாசலம், ஜெகஜீவன் ராம், விஜயகுமார், சங்கர், , எஸ். சென்ராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நன்றியுரையை தோழர் எஸ். ரமேஷ் வழங்கினார். போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.