ராயக்கோட்டை மதர்தெரேசா பப்ளிக்பள்ளி மற்றும் நியூஜெனரேசன் மெட்ரிக்பள்ளி இணைந்து, 75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடத்தினர்.
பேரணியை வழக்கறிஞர் முருகேசன் துவக்கிவைத்தார். இதில் ரெவ.ஜெ.நவராஜ், ஸ்டெல்லாநவராஜ், முருகேசன், ஷோபா முருகேசன், பள்ளி முதல்வர்கள்ஹமீத்கான், ராஜரத்தினம் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் கலந்துக்கொண்டு அரசியலமைப்பு சட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று மாணவர்களிடையேயும், மக்களிடையேயும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ராயக்கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி
