ராயக்கோட்டையில் இ.கம்யூ.கட்சி நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழா


கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் சுதந்திர போராட்ட வீரரும், இ.கம்யூ.முன்னாள்மாநில செயலாளரும், அகில இந்திய அளவில் கட்சியில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும், கரைபடியாத கரம், எளிமையின் சிகரம், ஐயா, தியாகி தோழர். இரா.நல்லகண்ணு அவர்களின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதற்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். பழங்குடி மாநில தலைவர் கெம்பன் இ.கம்யூ.கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தொட்டன், கணேசன், வெங்கடேசன் உட்பட இ.கம்யூ.கட்சியினர் கலந்துக்கொண்டனர்.