உள்ளாட்சி தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியம் , புதுப் பட்டிணம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பஞ்சாயத்து தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைப்பெற்றது.
கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் பாராட்டி கெளரவ விக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களும் பாராட்டப்பட்டன.
ஜல் ஜீவன், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ரமேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேவி , இளஞ்சியம், சண்முகம், சிவக்குமார், செல்வராணி, ராஜா, இலக்கியா , வினோத்குமார், இனியவன, சங்கமித்திரை, கலைவாணி, ஒன்றியக் குழு உறுப்பினர் சுமதி முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி முரளி, ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நிறைவாக ஊராட்சி செயலர் கார்த்திகேயன் நன்றியுரை கூறினார்.
அதே போன்று விளார் ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவர் மைதிலி சோம ரெத்தினசுந்தரம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது.
வட்டார வளர்ச்சி துணைஅலுவலர் வைத்தீஸ்வரன் கூட்டத்தில் கலந்துக் கொண்டு வழிக்காட்டினார்.
கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள்,அங்கான் வாடி ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துக் கொண்டனர்.
ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்கள் கெளரவிக்கப்பட்டார்கள்.
நிறைவாக ரவிச்சந்திரன் நன்றியுரை கூறினார்.
