கும்பகோணம் அருகே மெலட்டூரில் 20 வருடங்களுக்கு மேலாக ஆரி எம்ப்ராய்டிங் கலை மூலம் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து இலவசமாக மாணவிகளுக்கு மெலட்டூர் முதல் சிங்கப்பூர் வரை பயிற்சி அளித்து வரும் பட்டதாரி பெண் கலைஞரின் செய்தி தொகுப்பு

தமிழக அரசு முன்வந்து பள்ளி, கல்லூரி பாட புத்தகத்தில் ஆரி எம்பிராய்டிங் வொர்க் கலையை இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மெலட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி நடராஜன் (வயது 47), கணவர் பெயர் ராம்குமார்.
இவர் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில் தனது தாய் தந்தை மற்றும் கணவர் ஒத்துழைப்போடு “ஆரி ஒர்க் எம்ப்ராய்டரி” கலையை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

இவருக்கு சிறுவயதில் இருந்தே ஓவியக்கலை பெயிண்டிங் கலை, மீது ஆர்வமாக இருந்தார்.
தனது அப்பா மெலட்டூர் பாகவத மேளா
கலைமாமணி நடராஜன் நாடகத்துறையில் சாதித்து உள்ளாரோ.

அதுபோன்று ஓவியக்கலை, ஆரி எம்ராய்டரி கலையில் சாதிக்க வேண்டுமென ஆரி எம்பிராய்டிங் ஒர்கில் பட்டம் பெற்று கிராமங்கள் வெளிமாநிலங்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளான சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக இந்த ஆரி எம்பிராய்டிங் ஒர்க்கை பயிற்சியளித்து வருகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த “ஆரி எம்பிராய்டிங்” என்ற கலைக்கு சிறந்த கைவினையாளர் விருதுகள் மாவட்ட மாநில வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு விருதுகள் வாங்கி உள்ளார்.
இதில் புதிய முயற்சியாக “மண்டலா “என்ற ஓவியக்கலையை அறிமுகம் செய்து மாணவ மாணவிகளுக்கு நல்ல மன திறன் வெளிப்படவும் மனநிலையை ஒரு நிலையாக ஆக்குவதற்கு இந்த “மண்டலா” ஓவியக்கலை சிறந்து விளங்கும் என்பதற்காக தமிழக மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் இந்த பயிற்சியை கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழக அரசும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் முன்வந்து தமிழக பாடநூல் புத்தகத்தில் ” ஆரி எம்பிராய்டிங் ” பற்றிய கைத்திற தொழிலை இடம்பெற செய்ய வேண்டும் எனவும் முக்கியமாக மாணவிகளுக்கு இது ஒரு செயல்திறன் ஊக்குவிக்கும் கலையாகத் திகழும் எனவும், தங்கள் கலையை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி கல்லூரிகளில் பயிற்சி அளிக்க வாய்ப்பளிக்க மாறும் கோர்த்து விடுத்துள்ளார்.