திருப்பனந்தாளில் மீலாது விழா.மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

திருவிடைமருதூர் வட்டார ஜமாத்துல் உலமா சபையும், திருப்பனந்தாள் ஒன்றிய மஹல்லா ஜமாஅத்தும் இணைந்து நடத்திய மீலாது விழா
திருப்பனந்தாளில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் ரசூல் மைதீன் இமாம் தலைமை தாங்கினார். திருப்பனந்தாள் ஒன்றிய மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக
மௌலானா மௌலவி அபு தாஹீர் சிறப்பு பேருரை நிகழ்த்தினார்.

ஆவணியாபுரம் மதரஸாவின் துணை முதல்வரும்,தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயளாலர் மௌலவி ஜபருல்லா ஹஜரத் மற்றும் உலமா பெருமக்கள் மீளாது விழா வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் வட்டார ஜமாத்தார்கள் மற்றும் உலமா பெருமக்கள் திரளாக பலர் கலந்து கொண்டனர்.