
மதுரையில் மாவட்ட வருவாய்த்துறை ஊழியர் சங்க கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படைப் பணியாளர்கள் மாநில மத்திய சங்கத்துடன் இணைந்த அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளன மாநில செயற்குழு கூட்டம் அகில இந்திய தலைவர் முனைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தங்கராஜ், இராமச்சத்திரன், மாயாண்டிபாரதி, திருப்பதி, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசு 8வது ஊதிய குழுவில் கேட்கப்பட்ட 18 கேள்விகளுக்கு பதில் அறிக்கையை தயாரிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய தலைவர் முனைவர் கணேசன் மத்திய அரசின் எட்டாவது ஊதியக்குழு சார்பில் கேட்கப்பட்ட 18 கேள்விகளுக்கு பதில் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது அதில் 8 வது ஊதிய குழு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க வேண்டும் என பரிந்துரைக்கபட்டுள்ளது.
மேலும் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்த அடுத்த மாதம் 22ம் தேதி அனைத்து மாநிலத்தில் பணியாற்றும் “டி” பிரிவு பணியாளர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றுவார்கள் எனவும் . தொடர்ந்து 07.06.2026ல் புதுதில்லி ஜந்தர் மந்தரில் மாநில அரசுகளையும் மத்திய அரசையும் கண்டித்து மாபெரும் கோரிக்கை கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
