
இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்களை நீதிமன்றத்தில் வைத்து அவமதித்த வழக்கறிஞர் ராக்கேஷ் கிஷோரை கைது செய்ய வேண்டும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவனுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்க கோரி தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில்,
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் திருப்பத்தூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்களான வெற்றிக்கொண்டான், ஓம் பிரகாஷ் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் திருப்பத்தூர் மண்டல செயலாளர் இரா.சுபாஷ் சந்திரபோஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
உடன் வேலூர் பாராளுமன்ற தொகுதி துணை செயலாளர் வழக்கறிஞர் சி.முருகேசன், மண்டல துணைச் செயலாளர், கோவேந்தன்,நகர செயலாளர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள், சக்தி, பாஸ்கர், அண்ணாமலை, ரமேஷ்,மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் கோகுல் அமர்நாத்,நகரஇளைஞர்அணி
அமைப்பாளர் விக்கி (எ) விக்னேஷ், மற்றும் மாவட்டம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
