கேட் (CADD) டெக்னாலஜிஸ் ஸ்கூல் ஆஃப் டிசைன் நிறுவனத்தின்
உட்பிரிவான ரோபோமேட்டிக் நிறுவனம்,
மாணவர்களின் நவீன தொழில் நுட்ப திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக, யுனிவர்சல் ரோபோ லீக் எனும் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தியது..
கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இதில்,STREAM எனும், அறிவியல், தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், பொறியியல், கலை மற்றும் கணிதம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன..
முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,
CADD டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் குமரேஷ், இயக்குனர் வெங்கட்ராமன் ஆகியோர் தலைமை தாங்கினார்..
பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் நந்தகுமார் முன்னிலை வகித்தார்..
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக 75 ஸ்டூடன்ட்ஸ் மிஷன் சேலஞ்ச் இயக்குனர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், மதுரை கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் செந்தில் குமார், மற்றும் யுனிசெக் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிகில் ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தியா முழுவதும் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 1,200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்தப் போட்டியில், 200 பள்ளி அணிகளும் 50 கல்லூரி அணிகளும் கலந்து கொண்டு, மாணவர்களின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறமைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில் பங்காற்றினர்.
ரோபோமேட்டிக் நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற இந்த போட்டியில்,
ரோபோட்டிக்ஸ், ரோபோ சயின்ஸ், அறிவியல் கண்காட்சி உள்ளிட்ட பிரிவுகளில் நவீன தொழில் நுட்பங்களை மாணவ,மாணவிகள் அசத்தலாக காட்சி படுத்தி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இறுதியில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, 32 பிரிவுகளில் 74 விருதுகள் வழங்கப்பட்டன..
