சரியான முறையில் பணியை செய்யாத அரசு அலுவலர்களுக்கு மெமோ கொடுத்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர்

ஒகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை மஞ்சகொடம்பு பகுதியில் இருளர் இனத்தைச் சேர்ந்த 36 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். வீடு இல்லாத இவர்களுக்கு முதற்கட்டமாக கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 14 வீடுகள் கட்டப்படுவதற்கான அரசு ஆணை வழங்கப்பட்டு இதில் 12 கட்டி முடிக்கப்பட்டு அதில் குடியிருந்து வருகின்றனர்.

மீதமுள்ள இரண்டு வீடுகள் பல்வேறு காரணங்களை காட்டி கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. திடீரென அப்பகுதியில் ஆய்வுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் சதீஷ், இருளர் இன மக்களிடையே அவர்களின் குறை நிறைகளை கேட்டறிந்தார். அப்போது கட்டுமான பணிகள் முடிவடையாத இரண்டு வீடுகளுக்கு முன்பு சென்ற ஆட்சியர், கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடி மற்றும் அவரின் உதவியாளர், பஞ்சாயத்து செயலாளர் மற்றும் அரசு பொறியாளர் ஆகியோரிடம் வீடுகள் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

அப்போது ஆட்சியரின் கேள்விகளுக்கு பதில் அளித்த அரசு அலுவலர்கள், அவ்வப்போது பெய்யக்கூடிய மழையை காரணமாக காட்டி பணி நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆட்சியரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அரசு அலுவலர்கள் தினரினர். இதனை விஏஓ, மற்றும் அவருடைய உதவியாளர் உள்ளிட்டோர் பணியை ஒழுங்காக செய்யவில்லை எனவும், பஞ்சாயத்து செயலாளருக்கு மெமோ கொடுத்துள்ளார். கட்டுமான பணி நிறுத்தி வைக்கப்பட்ட வீடுகளை அளவு டேப் மூலம் அளந்து பார்த்து மிகக்குறைந்த அளவில் அடித்தளம் அமைக்கப்பட்டதாகவும் அரசு பொறியாளரையும் கண்டித்தார்.