சுகாதார சீர்கேட்டை உருவாக்கும் மீன் மொத்த வியாபாரத்தை தஞ்சாவூர் கீழ அலங்கம் பகுதியிலே இடமாற்றம் செய்யக்கூடாது! மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் தஞ்சை மாநகரத்தில் மையமாக உள்ள மக்கள் நெருக்கம் நிறைந்த கொடிமரத்துமூலை பகுதியிலே மீன் மொத்த வியாபாரத்தை கொண்டு வரக்கூடாது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் ஆர் .பி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். மாநகர நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், டி.எஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சிக்கு ஒதுக்குப்புறமான, போக்குவரத்து நெருக்கடி இல்லாத இடத்தில் மீன் மொத்த வியாபாரத்தை இடமாற்றம் செய்யப்பட வேண்டும், கொடிமரத்து மூலை கீழ அலங்கம் பகுதியில் கொண்டு வரக்கூடாது, சேதப்பட்ட சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும், தரக்குறைவான சாலைகளை போடுகிற ஒப்பந்தக்காரர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், தற்போது மழைக்காலமாதலால் மழை நீர் கால்வாய்களை தூர் வார்ப்பட வேண்டும், மழை நீர் கால்வாய் கட்டும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வெ.சேவையா, மாநகர நிர்வாகிகள் கல்யாணி, பிரபாகரன், செந்தில் நாதன், செல்வகுமார், செல்வராஜ், சுசீலா, ராஜலட்சுமி ,ஆறுமுகம், கருணாநிதி, கைலாசம், மாரிமுத்து, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாநகர நிர்வாகி தேவி நன்றி கூறினார்.