தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், அதிராம்பட்டினத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய பேரவை
பழனிவேல் தலைமையில் நடைபெற்றது.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர்
காரல் மார்க்ஸ்
பேரவையில்
கலந்து கொண்டு,
இளைஞர் பெருமன்ற வரலாற்றையும், அமைப்பு நிலை பற்றியும் இளைஞர்களிடம்
விளக்கி பேசினார்.
அதன் பின்
தலைவராகநிஜாம்,
செயலாளராகபழனிவேல்,
பொருளாளராக முகமது நசின், ஆகியோர் புதிய பொறுப்பாளராக தேர்வுச் செய்யப்பட்டனர்.
புதியபொறுப்பாளருக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சக்திவேல், ஒன்றியச் செயலாளர்
பூவேஸ் குப்தா,
நகர செயலாளர் காஜாமைதீன்,
மற்றும் பஜீர், பஞ்சவர்ணம் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர்.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர் இல்லாமல் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.அரசு இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நிரந்தர மருத்துவரை நியமிக்க வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் போக்குவரத்து இடையூறாக சாலையில் சுற்றி தெரியும் மாடுகளைப் பிடித்து பொது ஏலம் விட வேண்டும்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் இருபுறமும் உள்ள கருவேலம் மரங்களை அகற்றி இருபுறமும் மின்விளக்கு அமைத்து தர வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறாகஅதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே உள்ள மதுபான கடையைஉடனே அகற்ற வேண்டும்.
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
