ச
சூளகிரியில் தேமுதிகவின் 20ம்ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பத்மபூசன் விருதுபெற்ற விழா, நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா, 52 இலவச திருமண தம்பதியர் குழந்தைகளுடன் சந்திப்பு விழா, முதலாம் ஆண்டு நினைவேந்தல் ஆகிய ஐம்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முருகேசன் தலைமை தாங்கினார்.சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட அவைதலைவர் மாதையன்கிறிஸ்டோபர், பொருளாளர் தனபால், சீதாராமன், தினேஷ்,அன்பு, சென்னாசி, நாராயணசாமி, தூருவாசன்,சேலத்தான்,நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன்,மாநில துணை செயலாளர் சுதீஷ், ஜனார்தனன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பொருப்பாளர் சின்ராஜ், ராமசாமிரெட்டி ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நலத்திட்ட உதவிகள் வழங்கி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிஜயகாந்த் சிறப்புரையாற்றினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் அப்துல்ரஹீம் நன்றி கூறினார்.
சூளகிரியில் தேமுதிக ஐம்பெரும் விழா பொதுக்கூட்டம்
