தஞ்சாவூரில்,தலைகவசம் அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த பெண்களுக்கு கார்த்திகை தீபம் அகல் விளக்குகள், திரி நூல், நல்லெண்னைய் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் காவல் துறையினர் உதவியுடன் தஞ்சை ஜோதி அறக்கட்டளையினர்.

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் முயற்சியாக
தஞ்சையில் உள்ள ஜோதி அறக்கட்டளையினர் மண்பாண்ட தொழிலாளர்களிடம் இருந்து மொத்தமாக கார்த்திகை தீபம் அகல் விளக்குகளை விலை கொடுத்து வாங்கி
தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினருடன் இணைந்து

தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனை சாலையில் தலை கவசம் அணிந்து இரு சக்கர வாகனம் வந்த பெண்களை நிறுத்தி அவர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக காகித பை ஒன்றை வழங்கினார்கள்.
பையை திறந்து பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக கார்த்திகை தீப அகல்விளக்குகள் 20 திரி நூல் நல்லெண்ணெய் இருந்ததை கண்டு பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
