திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த (2023-2024) கல்வியாண்டுக்கான பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிவதற்கான கணக்கெடுக்கப்பட்டது. இதில் மாவட்டத்தில் 6,300 மாணவ, மாணவியர் பள்ளி செல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள், சமூகநலத்துறை அதிகாரிகள், கல்வித்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தற்போது 12 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதையடுத்து அந்த மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
