திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பசிலிகுட்டை பகுதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இந்து அறநிலை துறை திருக்கோவில்கள் சார்பில் திருமண விழா நடைபெற்றது

இதில் குடியானகுப்பம் பகுதியைச் சேர்ந்த சூர்யா மற்றும் ராஜமங்கலம் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்ற ஆகிய இருவருக்கும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் திருமணம் நடைபெற்றது.
மேலும் மணமக்களுக்கு ரூபாய் 80 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை இலவசமாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி வழங்கினார்.
இந்த திருமண நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர் அரசு. நகர மன்ற உறுப்பினர் வெள்ள ராஜா.பார்த்திபன்ஜீவிதா. பசிலிக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம்மாள் சந்திரன். ஜெகநாதன் இ ஓ.. செல்வராஜ்மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
