திருப்பத்தூரில் 12.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்! நியாய விலை கடை மற்றும் பள்ளி கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்

oplus_1024

தினேஷ்குமார் நிர்வாக ஆசிரியர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 மற்றும் 31, வார்டுகளில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நகராட்சி குழந்தை வளர்ச்சி மையம் அவ்வை நகரில் 12.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு குழந்தைகள் பயன்பாட்டிற்காக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

மேலும் அவ்வை நகர் பகுதியில் 14.50 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை மற்றும் வேலன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு SFC பள்ளி மேம்பாட்டு நிதியிலிருந்து கூடுதல் வகுப்பறை கட்ட ரூபாய் 70 லட்சம் உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

oplus_1024

இந்த நிகழ்வில் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ்,
நகர மன்ற உறுப்பினர்கள் ஜீவிதா பார்த்திபன், டிடி சங்கர், பொதுக்குழு உறுப்பினர் அரசு ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்