பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, எதிர்கொண்டு வருகிறோம். தற்போது வரை 10 சென்டிமீட்டர் அதிகமாக மழை பெய்த பீமகுளம் வாணியம்பாடி, புதூர் நாடு ஆகிய இரண்டு இடங்களைத் தவிர பெருமளவில் பெரிய மழை எதுமில்லை, தற்போது வரை அனைத்து இடங்களிலும் சேர்த்து சராசரியாக 12 சென்டிமீட்டர் மழை பெய்திருக்கிறது. அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு வருகிறது, பொதுமக்கள் அனைவரும் கவனமாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணையின் உடைய நீர்த்தேக்கம் 112 மில்லியன் கன அடி முழு கொள்ளளவை எட்டிருக்கிறது. தண்ணீர் நிரம்பி செல்கின்ற 16 கிராமங்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் ஆட்டோக்கள் மூலமாக பொதுமக்களுக்கு கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் மழை நிலவரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பெரிய பாதிப்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை இல்லை, மேலும் கட்டுப்பாட்டு அறையின் மூலமாக 24 மணி நேரமும், அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். இன்று காலை முதலே அனைத்து தாலுக்காக்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் சேதம் ஏற்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். சேதவிவரங்கள் குறித்து அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடைய அறிக்கை வந்தப்பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க. தர்ப்பகராஜ்,இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஜெ.நாராயணன், வருவாய் கோட்டாட்சியர் திரு.இராஜசேகரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
