
தாராபுரம்,
முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, குண்டடத்தில் பெண்கள் காலிக் குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குண்டடம் ஒன்றியம், கெத்தல்ரேவ் ஊராட்சிக்கு உள்பட்ட தொண்டாமுத்தூர், வண்ணாம்பட்டி, பொன்னாளிபாளையம் ஆகிய பகுதிகளில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் குண்டடத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர், முறையாக குடிநீர் வழங்க வலியுறுத்தி, குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர்கள், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.ரவி, தாராபுரம் தாலுகா செயலாளர் பி.லட்சுமணன், தாலுகா குழு உறுப்பினர் பி.தருமன் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிபிஐ கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
