


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று காலை தூய்மை பணியாளர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவு நீர் செல்லக்கூடிய ஓடையில் முட்டி அளவு தண்ணீரில் வெறும் கைகளை கொண்டு கழிவுகளை அகற்றச் சொல்லும் அவலம் நடைபெற்றுள்ளது. மக்களின் நலனுக்காக செயல்படும் தூய்மை பணியாளர்களின் நலன் பற்றி சிந்திப்பது யார்??? நோய்கள் பரவுவதை தடுப்பதற்காக சுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கும் கள ஆய்வாளர்கள் தூய்மை பணியாளருக்கும் குடும்பம் உண்டு என்பதை ஏன் நினைவில் கொள்ளவில்லை?? இதுதான் ராஜபாளையம் நகராட்சியின் திறமையான நிர்வாகமா?? கண்டு கொள்வாரா நகராட்சி ஆணையரும், நகராட்சி தலைவியும்…
