தேவிபட்டினம் அருகே திருமணம் மீறிய உறவில் இருந்ததை கண்டித்த கணவரை வடமாநில காதலனுடன் இணைந்து கொலை செய்ய முயன்ற பெண் உட்பட நால்வர் கைது!!!

ராமநாதபுரம் மாவட்டம்,தேவிபட்டினம் அடுத்த அழகன்குளம் சாமித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வட மாநில இளைஞருடன் திருமண மீறிய உறவில் இருந்ததை கண்டித்த கணவரை வடமாநில காதலனுடன் இணைந்து கொலை செய்ய முயன்ற பெண் உட்பட நால்வரை தேவிபட்டினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த அழகன்குளம் சாமிதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி கோட்டை ஈஸ்வரி (41) இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

லட்சுமணன் கொத்தனார் தொழில் செய்து வருகிறார். கோட்டை ஈஸ்வரி ஆற்றங்கரை பகுதியில் செயல்பட்டு வரும் இறால் பண்ணையில் வேலை செய்த போது அதே இறால் பண்ணையில் வேலை செய்த ஒடிசா மாநிலம் சோனைப்பூர் பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் பிஜி (31) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் மீறிய உறவில் இருந்து வருகின்றனர்.

கோட்டை ஈஸ்வரி கணவர் லட்சுமணனுக்கு தெரியாமல் சக்திகுமார் விஜிக்கு வீட்டில் உள்ள நகை, பணம் உள்ளிட்டவைகளை கடந்த சில மாதங்களாக கொடுத்த வந்துள்ளார். வீட்டில் நகை பணம் இல்லாதது குறித்து லட்சுமணன் கோட்டை ஈஸ்வரியிடம் கேட்டதற்கு முறையான பதில் சொல்லாமல் கோட்டை ஈஸ்வரி மழுப்பி வந்துள்ளார்.

இதனிடையே லட்சுமணனுக்கு கோட்டை ஈஸ்வரியும் சக்திகுமார் பிஜி திருமணம் மீறிய உறவில் இருந்தது தெரியவந்ததையடுத்து லட்சுமணன் இருவரையும் கண்டித்ததுடன் நகை பணத்தை திருப்பி ஒப்படைக்குமாறு எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கோட்டை ஈஸ்வரி, சக்திகுமார் பிஜி ஆகிய இருவரும் இணைந்து லட்சுமணனை கொலை செய்ய திட்டமிட்டு தொண்டி பகுதியைச் சேர்ந்த பிரதீபன் மற்றும் கௌதம் ஆகிய இருவருக்கு ரூ.70 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து லட்சுமணனை கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த தேவிபட்டினம் காவல் நிலைய போலீசார் மற்றும் தனிப்பிரிவு போலீசார் ஆகியோர் இணைந்து கோட்டை ஈஸ்வரி, சக்திகுமார் பிஜி, பிரதீபன், கௌதம் ஆகிய நால்வரையும் கைது செய்து கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கௌதம், பிரதீபன் சக்திகுமார் பிஜி ஆகிய மூவரையும் ராமநாதபுரம் சிறையில், கோட்டை ஈஸ்வரியை பரமக்குடி சிறையில் அடைத்தனர்.

திருமணம் மீறிய உறவில் இருந்த மனைவியை கண்டித்த கணவனை மனைவியே வடமாநில காதலனுடன் இணைந்து கூலிப்படை வைத்து கொலை செய்ய திட்டமிட்ட சம்பவம் தேவிபட்டினம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.