தேனி மாவட்டம்,
அரண்மனைப்புதூர் ஊராட்சி பகுதியில், நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் 100-ஆவது நாள் நடைபயிற்சியினை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்து நடை பயிற்சி மேற்கொண்டனர்
இந்நிகழ்வில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் எம்.. பி அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் .ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), .கே.எஸ். சரவணகுமார் (பெரியகுளம்) ஆகியோர் கலந்துகொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடந்த தொடங்கி வைக்கப்பட்டது.
பொதுமக்களிடையே தினசரி நடைபயிற்சி பழக்கத்தினை ஊக்கப்படுத்தவும் நடைபயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசின் முக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின்போது தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் 8 கி.மீ தூரம் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 100-ஆவது நாள் நடைபயிற்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துகொண்டு நிறைவு செய்தார்
மனிதர்கள் நோயின்றி வாழ முக்கிய செயல்பாடாக நடைபயிற்சி கருதப்படுகிறது. காலையில் நடை பயிற்சி செய்வதினால் மூளையின் திறன் அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், மூட்டு வலி மற்றும் நரம்பியல் பிரச்சனைகள் போன்ற நாள்பட்ட நோய்களை தடுக்கிறது. மேலும், தினசரி நடைபயிற்சி மேற்கொள்வதால் மன அழுத்தம் குறைவதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. சிறியவர்கள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் நடைபயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமையும்.
எனவே, பொதுமக்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு பெற நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். என்று நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர
நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ், அரண்மனைப்புதூர் பகுதியில் தொடங்கி கொடுவிலார்பட்டி, பள்ளப்பட்டி, கோட்டைப்பட்டி வழியாக மீண்டும் அரண்மனை புதூர் வரை 8 கி.மீ. தூரம் நடை பயிற்சி மேற்கொள்ளும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபயிற்சி பாதை தேர்வு செய்யப்பட்டது. பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் 8 கி.மீ.தூரம் கொண்ட நடை பயிற்சி பாதை தேர்வு செய்ய மாவட்டம் முழுவதும் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக தேர்தல் விழிப்புணர்வு நிகழ்வாக 100 கி.மீ தூரம் நடைப்பயிற்சி எனது தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறும்போது
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். ஒரு மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படுவது கல்வி மற்றும் சுகாதாரம், அதன் அடிப்படையில் நடப்போம் நலம்பெறுவோம் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் நடை பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனி மாவட்டத்தில் 8 கி.மீ தூரம் நடைபயிற்சி மேற்கொண்டார்கள். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 100-ஆவது நாள் நடை பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து நடைபயிற்சியிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியதாகும். பொதுமக்கள் அனைவரும் தினசரி நடை பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். மேலும் சத்தான உணவுப் பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் அனைவரும் ஆரோக்கியமுடன் வாழலாம் என இவ்வாறு எம் பி கூறினார்.
பின்னர், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் நடை பயிற்சி தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 12 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மற்றும் தன்னார்வலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா வழங்கினார்.
இந்நிகழ்வில் உதவி காவல் கண்காணிப்பாளர் வினோஜ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், வட்டாட்சியர் சதீஸ்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நடைபயிற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்
