பழமையான கார்களில் தஞ்சாவூருக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர்.

ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பின்லாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 42 சுற்றுலாப் பணிகள் தஞ்சாவூர் வருகை புரிந்தனர்.
அவர்களுக்கு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் அவர்கள் வழிகாட்டுதலில் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் மற்றும் தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் பொறியாளர். முத்துகுமார் ஆகியோர் தஞ்சாவூர் சந்தனமாலை அணிவித்து வரவேற்று புதுச்சேரிக்கு வழி அனுப்பி வைத்தனர்.
ஜாகுவார், மெர்சிடிஸ், ஆஸ்டின் ஹியலி, லகோண்டா, ஆல்வீஸ், போர்க்ஷ், பென்ட்லி, ஆல்ஃபா ரோமியோ, வோல்வோ உள்ளிட்ட பழமையான 22 வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள் இந்த சுற்றுலாவை மேற்கொண்டுள்ளனர். செய்தி … .. செய்தியாளர் … … ஏ.கே.சுந்தர் தஞ்சாவூர்
