போச்சம்பள்ளி அடுத்து புலியூர் கிராமத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளி குழுமம் நடத்தும் மருத்துவ முகாம்.

மத்தூர் டிசம்பர் 9
போச்சம்பள்ளி அடுத்து புலியூர் தனியார் பள்ளியில் செயின் பீட்டர் மருத்துவக் கல்லூரியும் வேளாங்கண்ணி பப்ளிக் குழுமமும் இணைந்து நடைபெற்ற மருத்துவ முகாமில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். ஒவ்வொரு நோயாளிகளுக்கும் அவர்களது குறைகளை அறிந்து அதற்கு தகுந்த மருத்துவர்களை அமர்த்தி அவர்களை சரியான வழிகாட்டுதலுடன் மிகவும் சிறப்பாக நடைபெற்ற முகாம் பொது மருத்துவம் ,இருதய நோய் ,சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் ,நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ,கை ,கால் ,மூட்டு வலி ,சிறுநீரக கோளாறு ,குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள், கண் பரிசோதனை, தோல் நோய், காது ,மூக்கு ,தொண்டை நோய்கள், மற்றும் பெண்களுக்கான நோய்கள் அனைத்தும் சிறந்த மருத்துவர்கள் பரிசோதிக்கப்பட்டு அதற்கான மருந்துகளையும் இலவசமாக அளித்தனர். சிறு சிறு அறுவை சிகிச்சைகளும் அங்கேயே செய்யும் அளவிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
. இம்முகாமினை மருத்துவர் இலஷியா தம்பிதுரை தலைமை தாங்கினார். வேளாங்கண்ணி பள்ளி தாளாளர் கூத்தரசன் சிறப்புரையாற்றினார் .மேலும் முகாமில் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி வி ராஜேந்திரன் வரவேற்புரை வழங்கினார் .மேலும் மாதையன் ,விவசாயி கென்னடி ,தூய மணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் ஆகியோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .இறுதியாக ரவிச்சந்திரன் ,ஜெயபால் ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
படவிளக்கம்
கொத்தமல்லி அடுத்து புலியூர் வேளாங்கண்ணி பள்ளிக்கூடம் மற்றும் செயின்ட் பீட்டர் மருத்துவ கல்லூரி இணைந்து நடத்திய மருத்துவ முகாமை மருத்துவர் இலஷியா தம்பிதுரை குத்து