ராமநாதபுரம் வேல் மருத்துவமனையில் பொங்கல் விழா-ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!!

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரையில் அமைந்துள்ள வேல் மருத்துவமனையில் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரிசி,ஆட்டா மாவு,கரும்பு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள வேல் மருத்துவமனையில் அதன் நிர்வாக இயக்குனர் லீலாவதி ஆர்.மலையரசு தலைமையில் வருடந்தோறும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம்.அதன் படி இந்த வருடம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி நரம்பியல் குழந்தைகள் நல மருத்துவர் ஆர்.மலையரசு,சென்னை சவிதா மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி ஜோத்ஸ்னா ஆர்.மலையரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை துவக்கி வைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை வேல் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.