ர
ராயக்கோட்டையிலுள்ள சிவதூருவாசர் மலையில் பிம்மா-விஷ்ணு-சிவன் என்னும் மும்மூர்த்திகள் உள்ளனர். இக்கோவிலில் தினந்தோறும் பூஜைகள் நடக்கின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பான நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதற்காக முன்னாள் ஊராட்சி தலைவர், கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, டாக்டர்.ராஜேந்திரன் ஆகியோர் ரூ.ஒரு லட்சம் செலவில் மணி(பெல்)யை பில்லர் அமைத்து சிறப்பு பூகைள் செய்து அமைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த தொல்லியல் துறையினர், தொல்லியல்துறை அனுமதி பெறாமல் பெல் வைத்ததாக ராயக்கோட்டை போலீசில் புகார் செய்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது குறித்து இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத்திடம் முறையிடப்பட்டது. அதன்பேரில் அவர் ராயக்கோட்டைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அர்ஜூன்சம்பத், தொல்லியல்துறை அனுமதிபெறாமல் இதுபோன்றவற்றை செய்யக்கூடாதுதான். அதே வேளையில் கோவிலில் மணி வைப்பதால் தொல்லியல்துறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற கூறினார். அதனைத்தொடர்ந்து சிவன் கோவிலை பார்வையிட்டு அர்ச்சகர் இல்லாதது பெரிய குறையாகும். எனவே அறநிலைத்துறையினர் சிவன் கோவிலுக்கு அர்ச்சகரை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்போது உடன் கூட்டுறவு சங்க தலைவர் சுப்பிரமணி, வக்கீல் நந்தகுமார், சமூக ஆர்வலர் ஜெயகணேஷ் மற்றும் பொது மக்கள் உடன் இருந்தனர்.
ராயக்கோட்டையில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் ஆய்வு
