தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் செம்முனி ( 68). தனியார் பள்ளி தாளாளர். இவர் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் இனியவன் தாயாரான அமிர்தவள்ளியிடம் ரூ.15 லட்சம் பெற்று கொண்டு பள்ளியை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி கொள்ள எழுதி கொடுத்தாக கூறப்படுகிறது .மேலும் அதில் வரும் லாப வருமானத்தில் 10 சதவீதம் வழங்கவேண்டும் என செம்முனி தெரிவித்துள்ளார் .
பள்ளியை நடத்தி வந்த அமிர்தவள்ளிக்கு நஷ்டம் ஏற்பட கொடுத்த பணத்தை திருப்பி கொடுக் கும்படி செம்முனியிடம் கேட்டுள்ளார். ஆனால் செம்முனி பணத்தை கொடுக் காமல் இருந்து வந்துள்ளார். இது குறித்து கடந்த மாதம் 19-ந்தேதி அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் அமிர்தவள்ளி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி செம்முனி பணம் பெற்று கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து அ.பள்ளிப்பட்டி போலீசார் செம்முனியை கைது செய்தனர்.
