ராமநாதபுரத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து பா.ம.க தொடர் முழக்கப் போராட்டம்!!!

தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தடை இல்லை உரிய தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும் 1000 நாட்களாகியும் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க அரசை கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம் தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்கள் தேனி.சை.அக்கீம் (கி) தவ அஜித் (மே) ஆகியோர் தலைமையில் நடந்தது.

பசுமைத்தாயகம் மாநில துணைச் செயலாளர் கர்ணமஹாராஜா,பா.ம.க மாவட்ட தலைவர் ஜீவா,மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தார்.மண்டபம் ஒன்றிய செயலாளர் மக்தூம் கான் அனைவரையும் வரவேற்றார்.சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் பாலா (ராமநாதபுரம்),முனியசாமி (திருவாடானை),மகேஷ் குமார் (பரமக்குடி),ரமேஷ் (முதுகுளத்தூர்) ஆகியோர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர்.தொகுதித் தலைவர்கள் வெங்கடேசன்,கனகராஜ்,மணிகண்டன்,பொன்.இருளாண்டி,மகளிரணி தொகுதி தலைவர்கள் கலைச்செல்வி,ராஜேஸ்வரி,ரதி தேவி,ஜெயஜோதி,மகளிரணி தொகுதி செயலாளர்கள் சுசிலா,நளினி ரோஜினி,செல்வி,அமுதா, நகரச் செயலாளர்கள் கீழக்கரை லோகநாதன்,ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் கார்த்தி,உழவர் பேரியக்க தலைவர் ஐ.பி கணேசன்,ராமேசுவரம் நகர் செயலாளர் முருகன்,கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகம்,முன்னாள் மாநில பொதுச்செயலாளர் செயலாளர் சகுபர் சாதிக்,வழக்கறிஞர் கணேசன் உட்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கிளை பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் லந்து கொண்டு தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.முடிவில் நகர் செயலாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.அதனைத் தொடர்ந்து பாரதிநகரில் உள்ள பா.ம.க திருவாடானை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் திருவாடானை சட்டமன்ற தொகுதி செயலாளர் முனியசாமி ஒருங்கிணைந்த பா.ம.க மாவட்ட நிர்வாகிகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து 2025-ம் ஆண்டிற்கான காலண்டர் வழங்கினார்.