வாலாந்தரவையில் குடியிருப்பில் இடையூறாகச் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளை அகற்ற ரூ.2 லட்சம் சொந்த நிதி-எம்.எல்.ஏ-வுக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்த பொதுமக்கள்!!!

ராமநாதபுரம் மாவட்டம்,வாலாந்தரவை ஊராட்சிக்குட்பட்ட தேவர் நகர் பகுதி பொதுமக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு காண தனது சொந்த நிதியில் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கி,போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ,பரிந்துரை செய்த மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் ஆகியோருக்கு பொதுமக்கள் போஸ்டர் மூலம் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம்,மண்டபம் ஊராட்சி ஒன்றியம்,வாலாந்தரவை ஊராட்சிக்குட்பட்ட தேவர் நகர் பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் சென்றது.இதனால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் இருந்து வந்துள்ளனர்.இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் செல்லும் உயர் மின் அழுத்த மின்சார கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு ராமநாதபுரம் தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ-வை மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீன் நேரில் சந்தித்து அப்பகுதி மக்களின் சார்பில் கோரிக்கை வைத்தார்.அவரின் கோரிக்கையை ஏற்ற எம்.எல்.ஏ உயர் மின்னழுத்த கம்பிகளை உடனடியாக அகற்றிட ஆகும் செலவுகளுக்கு தனது சொந்த நிதியில் ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.மேலும் இந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தங்களின் நீண்ட கால கோரிக்கையை கனிவுடன் ஏற்று,சொந்த நிதியில் ரூ.2 லட்சம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ-விற்கும்,பரிந்துரை செய்த மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே.பிரவீனுக்கும் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜீவா சங்கர்,முன்னாள் ஊராட்சி உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட வாலாந்தரவை தேவர் நகர் பகுதி பொதுமக்கள் வாலாந்தரவை பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி நன்றியை தெரிவித்துள்ளனர்.