தமிழ்நாடு, ஶ்ரீ லங்கா கட்டுமான தொழிற்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொது செயலாளர் டி.வைகுண்டமணி தலைமை தாங்கினார்.

மாநில தலைமை நிலைய செயலாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கூட லிங்கம் கலந்து கொண்டார். கூட்டத்தில் சங்க மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் திருநெல்வேலி மாவட்ட தலைவராக டி.வைகுண்டமணியும், தென்காசி கிழக்கு மாவட்ட தலைவராக ராஜாமணியும், தென்காசி கிழக்கு மாவட்ட தலைவராக சிவாவும், தூத்துக்குடி மாவட்ட தலைவராக ஜோதி முருகன் செங்கல்பட்டு மாவட்ட தலைவராக கிருஷ்ணா கோயமுத்தூர் மாவட்ட தலைவராக ரீமா கிருஷ்ணகிரி மாவட்ட தலைவராக விஜயன் வேலூர் மாவட்ட தலைவராக ரவி சந்திரன் தர்மபுரி மாவட்ட தலைவராக சந்தோஷ் உள்பட பலர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவாக திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் முத்து நன்றியுரை கூறினார்.
