
ஆறுச்சுடர் என்ற அமைப்பின் சார்பாக, தொடர்ந்து, 3 நாட்கள், மனிதனின் நுண்ணறிவு குறித்த பயிற்சி பட்டறை வகுப்புகள் கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் இன்று துவங்கியது
இப்பயிற்சி வகுப்பில் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் கீதா மனித நுண்ணறிவு
குறித்த ஆய்வு புத்தகத்தினை வெளியிட்டார், இதில், ஆறுச்சுடர் அமைப்பின், நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷிகா நேதாஜி, இணை இயக்குனர்கள் வெங்கட், கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,
கோவையின் புதிய அடையாளம் ப்ரைன் ஜீபிடி எனும், மனித நுண்ணறிவு குறித்த ஆய்வுகள் குறித்து விளக்கவுரையாற்றபட்டது. தொடர்ந்து கோவையில் புதிதாக உருவாகிக் வரும், ஒரு புத்துணர்வான அறிவு இயக்கம் தற்போது கல்வித் துறையின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், இந்த மாற்றத்தை வழி நடத்துவது, இந்தியாவின் முதல் மனித நுண்ணறிவு ஆலோசனை நிறுவனமான ஆறுச்சுடர் எனவும், அதன் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆஷிகா நேதாஜி மாணவ மாணவியர்கள் மத்தியில் தெரிவித்தார். மேலும் இந்த நிறுவனம் மூலமாக கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில், இத்தகைய கருத்தரங்குகளை நடத்த உள்ளதாக கூறினார். மேலும் நாம் ஏற்கனவே ஏஐ தொழில்நுட்பத்தின் திறன்களை கற்றுக்கொண்டு வருகின்றோம். ஆனால் மனித மூளை எப்படி முடிவெடுக்கிறது, உணர்ச்சி மேலாண்மை எப்படி நடக்கிறது, சிந்தனை எப்படி உருவாகிறது என்பதைக் கற்றுக் கொடுப்பதே ஆறுச்சுடர் அமைப்பின் குறிக்கோள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கல்வி, தொழில்நுட்பம், மற்றும் நிறுவனத் தலைவர்கள் என பல்வேறு துறைகளிலிருந்து முக்கிய விருந்தினர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
