திரும்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட செலந்தம்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு ஆசிரியராக கோமதி, உதவியாளராக ஜெயந்தி என்பவர் பணியாற்றி வருகிறனர்.
இந்த நிலையில் அந்த அங்கன்வாடி மையத்தில்
20 குழந்தைகள் உள்ளன ர். இந்த நிலையில் தினந்தோறும் நான்கு குழந்தைகள் மட்டுமே அந்த அங்கன்வாடி மையத்திற்கு வருகை புரிகின்றனர். இந்த நிலையில் சந்துரு என்ற மூன்று வயது குழந்தையை சாப்பிடும் போது மட்டும் வந்தால் போதும் மற்ற நேரத்திற்கு அங்கன்வாடிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை என உதவி உதவியாளர் ஜெயந்தி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் ஊர் பொதுமக்கள் மற்றும் செலந்தம்பள்ளி பஞ்சாயத்து தலைவர் உமாதேவிசரவணன், துணைத்தலைவர் ஷர்மிளாதேவி புருசோத்தமன் ஆகியோர் ஆசிரியர் கோமதி மற்றும் உதவியாளர் ஜெயந்தி ஆகியோரை அங்கன்வாடி மையத்தின் உள்ளே வைத்து பூட்டு போட்டு உள்ளனர்.
அதன்பின் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் இந்த அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் உள்ளனர் ஆனால் அந்த 20 குழந்தைகளும் அங்கன்வாடி மையத்திற்கு வருவதில்லை ஆசிரியர் கோமதி, உதவியாளர் ஜெயந்தி ஆகிய இருவரும் அங்கன்வாடி மையத்திற்கு வருகை புரியாத குழந்தைகளை அழைத்து வருவதில்லை மேலும் அங்கன்வாடி மையத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் எந்த ஒரு பொருளும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை மேலும் அங்கன்வாடி மையத்திற்கு நான்கு குழந்தைகள் மட்டுமே தினம்தோறும் வருகை புரிகின்றனர். ஆனால் அந்த நான்கு குழந்தைகளுக்கு முட்டையை முழுவதுமாக வழங்காமல் முட்டையை பாதியாக வழங்குவதாகவும், மேலும் மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் மற்ற பொருட்களை அங்கன்வாடி ஆசிரியர் கோமதி மற்றும் உதவி ஆசிரியர் ஜெயந்தி ஆகியோர் வீட்டிற்கு எடுத்து செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் அங்கன்வாடியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியரை அங்கன்வாடி மையத்தில் வைத்து பொதுமக்கள் பூட்டு போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
