செல்போன் டவர் அமைக்கும் பணியை நிறுத்த கோரி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த எர்ரம்பட்டி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான யிமிளி செல்போன் டவர் அமைய இருந்தது.

இதனைத் தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து தனியார் செல்போன் அமைக்க கூடாது என ஊர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

செல்போன் டவர் அமைவதால் அதிலிருந்து வெளியேறும் கதிர் வீச்சுகளால் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், என 3000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே எங்கள் பகுதியில் செல்போன் டவர் வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

மேலும் செல்போன் டவர் அமைக்கும் பணியை விருத்தாவிட்டால் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.