தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து தமிழ் தாய் வாழ்த்து முழுமையாக கூறினால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் பெட்ரோல் நிலையத்தில் குவிந்த மாணவ மாணவிகள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பேசு பொருளாக மாறிவிட்டது. அனைவரும் தங்களுக்கு தமிழ் தாய் வாழ்த்து தெரியுமா என்ற கோணத்தில் தன்னைத்தானே பரிசோதனை செய்யும் அளவிற்கு இந்த சர்ச்சை எழுந்த நிலையில் தஞ்சையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு நூதண விழிப்புணர்வு போட்டியை அறிவித்தது இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் ஹெல்மெட் அணிந்து வந்து கலந்து கொண்டனர்.

தஞ்சையில் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஹெல்மெட் அணிந்து வரக்கூடிய நபர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை பிழையின்றி கூறினால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று அறிவிப்புக்கு மாணவ மாணவிகளிலேயே வரவே ஆர்வமுடன் பெற்றோர்களுடன் வந்து தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பாடி 2 லிட்டர் பெட்ரோல் தங்களது வண்டியில் நிரப்பிச் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் பலரும் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக கூறி சென்றது மீண்டும் மீண்டும் மனனம் செய்து சரியாக சொல்ல முற்பட்டனர்.

இது போன்ற தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக கூறிய 25 நபர்களுக்கு 2 லட்சம் பெட்ரோல் வீதம் இலவசமாக வழங்கப்பட்டது.