தமிழக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல்நிலை குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் வயது 75 இவர் கடந்த நவம்பர் 11ஆம் தேதி உடல் நிலை குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சை எடுத்து வந்திருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்

இதன் காரணமாக திருப்பத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் நகர தலைவர் பரத் தலைமையில் இரங்கல் அனுசரிக்கப்பட்டது மேலும் மலர் தூவி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்

இதில் ஒன்றிய தலைவர் தண்டபாணி மூத்த தலைவர் பாரிவள்ளல் ஜெகநாதன் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சீனு பால் கடை முருகன் மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேஷ் மால் ஆகியோர் கலந்து கொண்டு மலத்துவி அஞ்சலி செலுத்தினர்