ராயக்கோட்டை,டிச.13-
ராயக்கோட்டை- கெலமங்கலம் சாலையில் உள்ள கோனேகானப்பள்ளி கிராமத்தில் சதீஷ் (27) என்ற விவசாயி, 2 அரை ஏக்கர் நிலத்தில் ரூ.3 லட்சம் செலவு செய்து தக்காளி சாகுபடி செய்துள்ளார். அது இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு வர உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு 20 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வந்து தக்காளி செடிகளை மிதித்தும், பிடுங்கி எரிந்தும், தக்காளியை தின்றும் அழித்துள்ளன. இதில் அதிர்ச்சியடைந்த சதீஷ் ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.வனத்துறைரினர் வந்து ஆய்வு செய்தனர். இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் தருவதாக கூறினர்.ரூ. 3 லட்சம் செலவு செய்துள்ள நிலையில் ரூ.25 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு என்ன செய்வதென்று கதிகலங்கியுள்ளனர்.
ராயக்கோட்டை அருகே காட்டு யானைகள் துவம்சம் செய்த தக்காளி தோட்டம்
