தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர்கள் சிவம் தலைமை வகித்தார் செயலாளர் தருமன் பொருளாளர் முனுசாமி பொருளாளர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி பென்னாகரம் காரிமங்கலம் பாலக்கோடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய பகுதியிலிருந்து வழக்கறிஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
தர்மபுரியில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
